×

1 டன் ரேஷன் அரிசியை விற்க முயன்றவர் கைது

 

ராசிபுரம், ஏப்.29: ராசிபுரம் அருகே, ரேஷன் அரிசி வாங்கி பதுக்கி விற்க முயன்றவர் கைது செய்யப்பட்டார். தமிழகத்தில், ரேசன் அரிசி கடத்தலை தடுக்க நாமக்கல் மாவட்டத்தில் குடிமைப்பொருள் வழங்கல் குற்றப்புலனாய்வுத்துறை போலீசார் நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றனர். அதன்படி நாமக்கல் மாவட்டம், ராசிபுரம் தாலுகா, அக்கரைப்பட்டி, வாய்க்கால்கரை அருகே பெரியசாமி என்பவர் வீட்டின் பின்பு ரேசன் அரிசியை பதுக்கி வைத்திருப்பதாக குடிமைப்பொருள் வழங்கல் குற்றப்புலனாய்வுத்துறை போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதன் பேரில், நேற்று எஸ்ஐக்கள் ஆறுமுக நயினார், ஜானகிராமன், ஏட்டு பிரகாசம், உள்ளிட்டோர் சம்பவயிடம் சென்று பார்த்தபோது 22 மூட்டைகளில் 1100 கிலோ ரேஷன் அரிசி இருந்தது தெரிய வந்தது. இதையடுத்து அரிசியை பதுக்கி வைத்திருந்த பெரியசாமி (58), என்பவர், ரேஷன் அரிசியை வாங்கி வெண்ணந்தூரில் உள்ள வட மாநில தொழிலாளர்களுக்கு அதிக விலைக்கு விற்பனை செய்வதற்காக பதுக்கி வைத்திருந்த 1100 கிலோ ரேஷன் அரிசி மற்றும் டூவீலரை பறிமுதல் செய்தனர்.

The post 1 டன் ரேஷன் அரிசியை விற்க முயன்றவர் கைது appeared first on Dinakaran.

Tags : Rasipuram ,Tamil Nadu ,Civil Supplies Crime Investigation Department ,Namakkal district ,Namakkal ,
× RELATED ரேசன் பொருட்களை கடத்தி விற்க முயற்சி...